காதல்க் கவிதைகள்



உன் மொழிவு


https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-khGaawwAURE%2FUi2diC1xGEI%2FAAAAAAAAAKU%2FALDA244BsXY%2Fs1600%2Fi75194772__szw1280h1280_.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*


நான் மொழிந்த ஓர் வார்த்தைக்குநீ திரும்பிய

நொடிப் பொழதில்...

கலைந்த உன் முடியின்

உதிர்ந்த ஒர் கேசம் வந்து

கீறிய இதயக்கூட்டின்

கிழீந்த என் பாசக் கோட்டில்

சிந்திய துளிகளிலே மிஞ்சிய

உதிரமொன்று

வாடையின் தீண்டலுக்கு உன் முன்

வார்த்தைகள் மொழியுமடி

அன்பே........!

கிழித்தது உன் கேசம் என்றாலும்

கிழிந்தது என் இதயமடி.

முல்லைக்கேசன்




TamilCNN வலைத் தளத்தில் வெளியாகியுள்ள என்னுடைய இந்தக் கவிதையைப்

பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.





கடிதம்


https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-mQ78IXN0vgM%2FUi2VGQIvdwI%2FAAAAAAAAAI0%2FP8TeciT9F64%2Fs1600%2Frtykiryiktik.png&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*















வெகு நேரமாய் சிந்தியதிலிருந்து

விலகிய குமிழ் ஒன்று

என் இதயக் கோடுகளில்

கனத்த தொன்றாய்

கன்னக் குழியைக் கடந்து

சென்ற இறுதிக்

கண்ணீர்த் துளியைக் கேட்டேன்

அன்பே

அவள் என் கடிதத்தை நேசித்துக்

கொண்டிருப்பாளா?

நாசூக்காய்

வந்த பதில்

நாசிகளைத் தாண்டி காதுகளை

அடைந்தது

மடையா அவள்

இன்னொருத்தனின் கடிதத்தை

வாசித்துக் கொண்டிருப்பாள்


                                                                                                                                             முல்லைக்கேசன்


வார்ப்புச் சிற்பங்கள்


https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-5EVSF3BbGSM%2FUi2WGhnYZ1I%2FAAAAAAAAAJA%2FFTeMgsdMVlI%2Fs1600%2Fyok.png&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*



















படிக்கல் பதித்த தரையாய்

பள பளக்கு கன்னம்

அவள் புருவம்

மறவன் சேரனது சின்னம்

கொவ்வை யிதழ் உயிரை

கொத்தி தின்னும்

பின்னல்

அசைந்தால் பிசைந்து

வைத்த மாயக் குயவ்ன் கிண்ணம்

புன்னகைத்தால்

தெரியும்

அவள் கீற்றுப் பற்களின்

தெரிக்கின்ற

வார்ப்புச் சிற்பங்கள்

அத்தனையும் சொன்னால்

இவள் ஒரு கலைக்கழக

வண்ணம்.


                                                                                                                                                              முல்லைக்கேசன்


யாசகம்

https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-GFjzrS3OnOA%2FUi2XjG_CJPI%2FAAAAAAAAAJM%2FqtPVwWcMajk%2Fs1600%2Frtjrjk.png&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*


என் இளவட்டங்கள் எல்லாம்

போதையின்

மடியில் இள நெஞ்சுகளைத்

தாலாட்டியபடியே

தங்கக் குவளைகளுக்கு தாம்பூலம்

பூசிக்கொண்டு

உறங்குகிறார்கள்



நான் மட்டும் பேதையின் அடியில்

ஏனெனில்

உன்னைக் காணும் போதெல்லாம்

என் மொழித் தேசத்தில்

வார்த்தைக்கு பஞ்சம்

ஏற்பட்டு வீதியோரங்களில் எல்லாம்

யாசகம் செய்ய

தொடங்கி விடுகிறது என் நா





நான் ஏது செய்ய

இருக்கின்ற ஒன்றிரண்டும்

இமைகின்ற பொழுதில்

திர்ந்து விடுகிறதே

இறைவா...!


                                                                                                                                                             முல்லைக்கேசன்


ஒருசாண்


https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-yYRPu8CqI-w%2FUi2X8gqEcVI%2FAAAAAAAAAJU%2FxC_ulxOSdt4%2Fs1600%2Fdtykfy.png&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*












அன்பே ஒரு சாண் இடைவெளியில்

நீ இருந்தும் நான்

ஒருவரியும் பேசவில்லை

காரணம்

சொற்களை வார்த்தை யாக்கும்

அவசரத்தில்

அரிச்சுவடியில் தடுக்கி

விழுந்து

மயங்கிக் கிடந்தேன்.

  முல்லைக்கேசன்


அழகு

https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-5sfj6Bgnto0%2FUi2YNgY6jZI%2FAAAAAAAAAJc%2FqdXGrNjP6gY%2Fs1600%2Fuj644.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*












பெண்ணெ பூவில் ரோஜாவும்

பெண்னில்

நீயும் -ஏன்

அத்தனை அழகு

இருவர் இதழ்களும் சிவந்திருக்கும்

தன்மையோ!

   
                                                                                                                                                 முல்லைக்கேசன்



ஜனிப்பு

https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-migQxBEsCM8%2FUi2ZFB8qX-I%2FAAAAAAAAAJo%2FR4xsKvFV33M%2Fs1600%2Fti7.png&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*


படுக்கையில் இருந்தபடி

தூக்கத்தின் இரட்சிப்பில் -என்

கைகளில் நளினம்

தோழன் கேட்கிறான்

என்னடா !

மரணத்தில் ஜனிக்கிறாய்

என்னவளின் இதயச் சுவர்களில்

காதல் ஓவியம்

வரைகிறேன் என்று

சொல்லவா முடியும்.


                                                                                                                                                           முல்லைக்கேசன்



மல்லிகப் பூ

https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-iE7f8KHgXxo%2FUi2awUEjCBI%2FAAAAAAAAAJ0%2FBVO7DwYdHU8%2Fs1600%2Fgtulu.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*


மாருதம் வாருகின்ற

ஓசையினை மங்கையின்

சலங்கை ஒலிகள் தடுக்கிறதே கிலுங்கும்

ஒலிகள் கேட்பதனால்

கங்கையின் ஒவ்வோர் துளியும் சிலிர்க்கிறதே

உன் ஓரப்

பார்வையின் ஓரங்களை

அத்தனை துளியும் நனைக்கிறதே ஈரக் கன்னங்கள்

மின்னியதால் அன்பே

சாரல் மழையென்று

ஆனதுவொ?

அல்லியின் கன்னங்கள் கிள்ளிய வேகத்தில்

மல்லிகப்  பூவொன்று

மலர்ந்ததுவே.







                                                                                                                                                  முல்லைக்கேசன்


அவளேதான்



அவளேதான் கனவையும் நனவையும்

வித்தியாசப்

படுத்திக் கொள்ள

கட்டில் மெத்தைகளுக்கெல்லாம் தினம்

கடிவாளம் பூட்டிய எனக்கு

முகமன் கூறாது

வந்த பதிலொன்று

கனவென்பது கற்பனையின் உச்சத்தில்

கானல் நீரில்

மிதப்பதும் 

நனவென்பது நிஜத்தில் மூழ்கிய

புயத்தில்

வியர்ப்பதும் என்றது

இவையெல்லாம்

நானாய் உணரவில்லை

அவளாய் உணர்த்தியது -ஆம்

அவளேதான்...!

    
                                                                                                                                                   முல்லைக்கேசன்


சாலைக் கிளுவைகள்

https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-vCD_PCjXay4%2FUi2cnUptFxI%2FAAAAAAAAAKI%2FhFvvuxRaYa0%2Fs1600%2F6i65i.png&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*


என் பூவரசின் வாசங்களால்


நாசிகள் நிரப்பப்பட்ட

சாலையோரத்தின்

கிளுவைக் கதிகால்கள் எல்லாம்

என் முகத்திற்கு தினம்

சவர அலகாய் எரிச்சலைத் தடவி ஏகாந்தம்

ஓதுகின்றன


நான் அந்த சாலை ஓரங்களைக்

கடந்து செல்லும்

போதெல்லாம்

நீயும் நானும் ஒவ்வொரு அந்தியும்

வார்த்தைப்

பரிமாற்றங்களுக்காய்

வளைந்த கிளுவை வேலிகளின் சாரல்களில்

ஒதுங்கிய  பொழுதுகளில்

என் உதடுகள்

சிந்திய

வார்த்தைகளை

முள் வேலிகள் கீறிக் கிழித்ததனால்

உன் உதடுகள் கசிந்திட

எண்ணிய மௌனங்களை

பூவரச மொட்டுக்கள் நுகர்ந்து

கொண்டதாலும்



இருவரும் மௌனச் சந்தியில்

சிந்திக்கத் தொடங்கியதும்

அந்திப் பொழுதுகளுக்குச் சலிப்புத் தட்டியதால்

உன் வளைக் கரங்கள்

பிடுங்கிக்

குவித்து விட்டிருந்த

கிளுவை இலைகளின் தளும்புகளில்

இன்னமும் நீர் வடிந்து

கொண்டிருப்பதை எண்ணி.

       
                                                                                                                                                                        முல்லைக்கேசன்

vvv

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லைக்கேசனுக்கான உங்கள் கருத்துக்கள்....

ஈழத்து மண்ணின் வாசங்கள் வீசும் தமிழ்க் கவிதைகளை இத் தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். என் போன்று வளர்ந்து வரும் இளம் கவிஞர்களுக்கு தங்கள் ஆதரவுகள் இன்றியமையாதவை. இன் முகத்துடன் உங்கள் முல்லைக்கேசனாய்...

தொடர்புகட்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *