செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

தேசப்படங்கள்

தந்திகள் அறுந்த வீணைகளை பெரு

விரல்களின் நுணிகளால்

தடவிப் பார்த்துக்

கொண்டே

கடந்த காலத் தாள்களின்

கரைந்து கொண்ட முற்றுப் புள்ளிகளுக்கு

கண்மைகளைத் தடவித்

தடவி  தடயங்களை மீட்டுக்

கொண்டிருந்தேன்



வேலிகள் பறித்த பயிர்களையும்..!

தாலிகள் அறுத்த உயிர்களையும்..!

மாலைகள் அறுத்த சோலைகளையும்..!

ஆவிகள் குடித்த ஆலைகளையும்..!

அருவிகள் இழந்த ஆறுகளையும்...!

விடலைகள் தொலைத்த மாதுகளையும்...!

இளமைகள் தொலைத்த கிழவிகளையும்...!

படலைகள் இழந்த வளவுகளையும்...!

கற்பங்கள் தொலைந்த கன்னிகளையும்...!



புழுதி படிந்த தேசப்படங்களில்

தடவிப் பார்த்து என்

தேசங்களை

அடையாளம் காண நேருமென்று

நான்

இதுவரை எண்ணியதில்லை

என் பாட்டனும் சொன்னதில்லை.



முல்லைக்கேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லைக்கேசனுக்கான உங்கள் கருத்துக்கள்....

ஈழத்து மண்ணின் வாசங்கள் வீசும் தமிழ்க் கவிதைகளை இத் தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். என் போன்று வளர்ந்து வரும் இளம் கவிஞர்களுக்கு தங்கள் ஆதரவுகள் இன்றியமையாதவை. இன் முகத்துடன் உங்கள் முல்லைக்கேசனாய்...

தொடர்புகட்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *